கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப் போராட்டமானது தாமரைத்தடாகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பொல்துவ சந்தியிலுள்ள நாடாளுமன்ற நுழைவுப் பகுதிக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் இப் போராட்டத்தில் ஈடுபடுவோர் ,யோர்க் வீதி மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பிரதான வீதிகளின் ஊடாகச் செல்வதற்கு நீதிமன்றத்தினால் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







