வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சம் அறிமுகம் – அப்டேட் பண்ணிட்டீங்களா?

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட்டில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் மற்றும் ஃபைல் ஷேரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் செயலியில் பலரும் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த அம்சங்களில் ஒன்றாக மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் உள்ளது. முன்னதாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களிடையே இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இதன் வெளியீடு துவங்கி நடைபெற்று வருகிறது. உலகம் முழுக்க வாட்ஸ்அப் செயலியில் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சம் ஸ்டேபில் மற்றும் பீட்டா பில்டுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

புது அம்சம் கொண்டு பயனர்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு எமோஜிக்கள் மூலம் பதில் அனுப்ப முடியும். இது மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் பிகரப்படும் ஃபைல் சைஸ் எண்ணிக்கையும் 2GB வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதன் அளவு 100MB-யாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் இந்த இரு அம்சங்களும் விரைவில் வழங்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், புது அம்சங்கள் பற்றிய அறிவிப்பை வாட்ஸ்அப் வெளியிட்டு உள்ளது. இத்துடன் க்ரூப் சாட்களின் எண்ணிக்கையும் இருமடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. ரியாக்‌ஷன்ஸ் அம்சத்தில் முதற்கட்டமாக சில எமோஜிக்கள் மட்டும் வழங்கப்பட்டு, அதன்பின் அந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்து இருந்தது. இத்துடன் வாட்ஸ்அப் க்ரூப் சாட்களின் எண்ணிக்கை 256-இல் இருந்து 512 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தற்போது வாட்ஸ்அப் மெசேஜ் ரியாக்‌ஷன்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் ஆறு எமோஜிக்களை பயன்படுத்தி பதில் அனுப்ப முடியும். இவற்றை பயன்படுத்த மெசேஜை அழுத்திப் பிடித்து, திரையின் மேல் தோன்றும் எமோஜிக்களில் ஒன்றை தேர்வு செய்தாலே போதுமானது.