சர்க்கரை நோய் இருக்கா? இந்த பழங்களை பயமில்லாமல் ருசித்து ருசித்து சாப்பிடலாம்..!

சர்க்கரை நோயாளிகள் உணவு விடயத்தில் எப்போதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக இப்பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை நிறைந்த உணவுகளை அறவே தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

இதனால் சர்க்கரை நோயாளிகளால் பழங்களை கூட ரசித்து சாப்பிட முடியவில்லை. ஏனெனில் பல பழங்களில் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ளது.

ஆனால் சில பழங்களில் இந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளி சாப்பிட வேண்டிய பழங்கள்
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தை சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடலாம். ஆரங்சு பழத்தில் 12 கிராம் சர்க்கரை மற்றும் 70 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதில் பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் உள்ளதால், இது இரத்த அழுத்த அளவை சீராக்க உதவுகிறது.

ராஸ்ப்பெர்ரி
ராஸ்ப்பெர்ரி பழத்தில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. ஒரு கப் ராஸ்ப்பெர்ரி பழத்தில் 5 கிராம் சர்க்கரையுடன், நார்ச்சத்தும் உள்ளது. ஆகவே இந்த பெர்ரி பழத்தை சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் அதிகரிக்காது.

கிவி
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இதில் சர்க்கரையின் அளவும் குறைவு. அதுவும் ஒரு கிவி பழத்தில் 6 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது.

அவகேடோ
அவகேடோ பழத்தில் சர்க்கரை மிகவும் குறைவு. ஒரு அவகேடோ பழத்தில் 1 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. ஆகவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான பழம். அதோடு இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து.

ப்ளம்ஸ்
சுவையான ஊதா நிற ப்ளம்ஸ் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஒரு ப்ளம்ஸ் பழத்தில் 7 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. ஆகவே இந்த பழத்தையும் சர்க்கரை நோயாளில் அச்சமின்றி வாங்கி சாப்பிடலாம்.

ஆப்பிள்
ஆப்பிள் ஜூஸ் முழுமையாக சர்க்கரை நிறைந்தது. ஆனால் ஆப்பிளை அப்படியே கடித்து சாப்பிட்டால், அதில் இருந்து 19 கிராம் சர்க்கரை மட்டுமே கிடைக்கும். மேலும் தினமும் ஒரு ஆப்பிளை கடித்து சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளிடையே காணப்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் மற்றும் இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும்.

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது அஜீரண கோளாறு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.