பாரதி செல்லும் இடத்தில் கண்ணம்மா அதிர்சியடைந்த பாரதி வெளியாகிய புதிய புரமோ

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நிகழ்ச்சி இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், பல வித திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது.

சமீபத்தில் லெட்சுமிக்கு தனது தந்தை யார் என்று தெரியவந்த நிலையில், சௌந்தர்யாவின் காதலர் என்றும், வெண்பாவின் தாய் என்றும் இரண்டு புதிய கதாபாத்திரத்தினை களமிறக்கியுள்ளனர்.

புதிய அவதாரத்தில் கண்ணம்மா
வில்லி வெண்பாவிற்கு வில்லியாக நடிப்பில் அசத்தி வருகின்றார் ரேகா. இந்நிலையில் தற்போது புதிய ப்ரொமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரொமோ காட்சியில் கண்ணம்மா புதிய அவதாரம் எடுத்து அதிரடியாக எண்ட்ரியாகி உள்ளார். மருத்துவமனையில் அட்மின் பொறுப்பிற்கு கண்ணம்மா வந்ததை அவதானித்த பாரதி பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.