விஜய் நடிப்பில் உருவாகியிருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று உலகளவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது.
விஜய்யின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், அவர்களின் முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ய தவறிவிட்டது.
பீஸ்ட் 2
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் நெல்சன் திலிப்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குனர் நெல்சன் ‘ சாத்தியம் இருக்கு ‘ என்று கூறியுள்ளார்.
மேலும் ‘ பீஸ்ட் படத்தின் கதையை எழுதும் போதே அப்படி ஒரு எண்ணம் இருந்தது. கதாபாத்திரத்தை வைத்து அதனை கொண்டு செல்லலாம் என்று நினைத்தேன் ‘ என வெளிப்படையாக கூறியுள்ளார்.







