சிலம்பரசன் நடித்து வெற்றிபெற்ற மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து மன்மத லீலை என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த அந்த படத்தை ராக்போர்ட் முருகானந்தம் தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சென்னை போன்ற பெருநகரங்களில் வரவேற்பைப் பெற்றது. காரணம் அதிகமாக லிப்லாக் காட்சிகளை வைத்து இருந்தார். மேலும் முன்னாள் காதலியை மீண்டும் சந்திப்பது போன்ற திரைக்கதையுடன் விருவிறுப்பாக படம் அமைந்திருந்து.
இந்த நிலையில் தமிழுக்கு புதிதாக வந்துள்ள ஆஹா ஓ.டி.டி தளம் ‘மன்மத லீலை’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிந்தைய உரிமையை பெரும் தொகை கொடுத்து பெற்றுள்ளது. அதேபோல் மன்மதலீலை படத்தின் தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரித்துள்ள மற்றொரு படமான ‘குருதி ஆட்டம்’ படத்தின் வெளியீட்டுக்கு பிந்தைய உரிமையை ஆஹா ஓ.டி.டி தளம் பெற்றிருப்பதாக அந்த நிறுவனத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்தப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.இந்தப்படத்தினை திரையரங்குகளில் பார்க்க தயங்கியவர்களுக்கு வீடுகளில் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ எந்த வீட்டிலும் மன்மத லீலை குழப்பதை எற்படுத்தாமல் இருந்தால் சரி…








