சுவை நிறைந்த வாழைப்பூ பகோடா செய்யலாம் வாங்க

பக்கோடா என்றால் பலருக்கும் பிடிக்கும். அதிகம் ஆனியன் பக்கோடாவையே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் உடலுக்கு பல நன்மைகளை தரும். வாழைப்பூ பக்கோடாவை எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வாழைப்பூ – 1

வெங்காயம் – 1 நறுக்கியது

மோர் – 1 கப்

கடலை மாவு – 1 கப்

மிளகாய்த் தூள் – தேவைக்கு

சோள பிளவர் மாவு- 1 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கறிவேப்பிலை – தேவைக்கு

எண்ணெய், தண்ணீர் – தேவைக்கு

உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்

முதலில் வாழைப்பூவை சுத்தப்படுத்தி பொடிதாக நறுக்கி மோரில் போட்டு அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனோடு கடலை மாவு, சோள பிளவர் மாவு, மிளகாய் தூள், வெங்காயம், கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். சூப்பரான வாழைப்பூ பக்கோடா ரெடி.