கருவேப்பிலை ஃப்ரஷ்ஷாக ரொம்ப நாளா இருக்கனுமா…அப்போ இதை பண்ணுங்க

அன்றாட புதிய புதிய உணவுகளை தயார் செய்யும் நாம் அதன் ருசியை அதிகரிக்கவும், எளிமையான முறையில் தயார் செய்யவும் சில வழிகளை அறிந்து வைத்திருப்போம்.

அந்த வகையில், இன்று நாம் பார்க்கவுள்ள சில குறிப்புகள் மூலம் நம்முடைய சமையலில் இன்னும் கூடுதலான ருசியை கொண்டு வர முடியும்.

அப்படியான சில எளிய குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

கருவேப்பிலை
கருவேப்பிலையை பிளாஸ்டிக் டப்பாவில் சேர்த்து வைப்பதை விட, ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

இது கருவேப்பிலை சீக்கிரம் காய்ந்து போகாமல் இருக்க உதவுகிறது.

மேலும் அவை பச்சையாக அப்படியே நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

ஊறுகாய்
வீட்டில் ஊறுகாய் தயார் செய்யும் மக்கள், ஊறுகாயை கிளற மரத்தால் ஆனா கரண்டியை பயன்படுத்தவும்.

இது ஊறுகாய் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க உதவும்.

பருப்பு
மழை பெய்யும் போது மழைத் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளவும்.

இந்த மழைத் தண்ணீரில் பருப்புகளை வேக வைக்கவும். மழைத் தண்ணீரில் வேக பருப்பு சட்டென மலர்ந்து வரும்.

மேலும் நல்ல ருசியாகவும் இருக்கும்.