அஜித் நடிப்பில் வெளியாகி பிரபலமான திரைப்படங்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவரின் திரைப்படங்கள் வெளியானால் அந்த நாளையே ரசிகர்கள் திரையரங்கையே கொண்டாட நாளாக மாற்றி விடுவார்கள். அந்தளவிற்கு தமிழகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகர் அஜித்.

மாஸ் ஹீரோவான அஜித் தனது போட்டி நடிகரை போல எப்போதும் ஒரே பாணியில் தனது படத்தை ரசிகர்களுக்கு கொடுக்காமல், ஹீரோ, வில்லன் என வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவார்.

அப்படி அவர் நடித்த படங்களே அவருக்கு மிக பெரிய மாஸ் ரசிகர்கள் கூட்டம் உருவாக காரணமாக இருந்தது. இதனிடையே நாம் தற்போது நடிகர் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளியான சிறந்த திரைப்படங்கள் குறித்த லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.

ஆசை
கடந்த 1995 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆசை. அஜித் ஹீரோவாக அறிமுகமாகி மிக பெரியளவில் வெற்றியடைந்த திரைப்படங்கள் ஏதும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானத்தால் அனைவரும் ஆசை நாயகன் என்று தான் அழைத்து வந்தார்கள்.

அந்தளவிற்கு அஜித்தின் திரைப்பயணத்தை மாற்றியமைத்தது இந்த ஆசை திரைப்படம், செம திரில்லர் திரைப்படமான ஆசை அஜித் நடிப்பில் வெளியான சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

காதல் கோட்டை
அஜித் – அகத்தியன் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான திரைப்படம் காதல் கோட்டை, 1996 ஆம் ஆண்டு வெளியான இந்த காதல் கோட்டை திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்டது என கூறலாம். சூர்யா-கமலி இடையேயான தொலைதூர காதல் போராட்டமே காதல் கோட்டை படத்தின் ஒன் லைன் கதை.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான சிறந்த காதல் திரைப்படங்களை எடுத்து பார்த்தால் கண்டிப்பாக காதல் கோட்டை திரைப்படம் இடம்பிடித்து இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 270 நாட்களுக்கு ஓடிய காதல் கோட்டை திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றது என்பது குறிபிடத்தக்கது

வாலி
அதுவரை காதல் மன்னனாகவும் துள்ளல் ஹீரோவாகவும் கலக்கி வந்த அஜித் குமார், முற்றிலும் புதிய பரிமாணத்தில் வில்லனாக மிரட்டிய திரைப்படம் வாலி. இரட்டையர் சகோதர கதாபாத்திரத்தில் ஹீரோ மற்றும் வில்லனாக மாஸ் காண்பித்து இருந்தார்.1999 ஆம் ஆண்டு வெளியான வாலி திரைப்படம் பெரிய வசூலை குவித்து திரையரங்குகளில் 270 நாட்களுக்கு மேல் ஓடியது.

பெரியளவில் வரவேற்பை பெற்ற வாலி திரைப்படம் இன்றும் கூட அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

முகவரி
அஜித் நடிப்பில் 2000 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் முகவரி, ஒரு மிடில் கிளாஸ் இளைஞர் வெற்றிகரமான இசையமைப்பாளர் ஆக வேண்டும் என போராடுகிறார். அந்த லட்சிய பயணத்தில் அவர் சந்திக்கும் காதல், ஏமாற்றம், பொறுப்பு ஆகிய விஷயங்களை ஸ்ரீதர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை எமோஷனலாக சொல்லியிருப்பார்கள்.

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களாலும் முகவரி திரைப்படம் கொண்டாடப்பட்டது. அந்த அளவிற்கு நடிகர் அஜித் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இப்படம் அப்போது பாக்ஸ் ஆபீஸிலும் பெரிய வசூல் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.

தீனா
கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் தீனா, முன்னணி ஹீரோவாக இருந்து வந்த நடிகர் அஜித் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்த திரைப்படமானது இந்த தீனா. இன்று அஜித்திற்கு இவ்வளவு பெரிய மாஸ் ரசிகர்கள் கூட்டம் உருவாகி, அனைவரும் ‘தல’ என தங்களின் அன்பை காட்டுவதற்கு தீனா திரைப்படமே முக்கிய காரணம்.

செம ஆக்ஷன் திரைப்படமான தீனாவில் அஜித் தனது திரைப்பயணத்தில் சில பேமஸ் டைலாக் எல்லாம் பேசி மாஸ் காட்டியிருப்பார். ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த தீனா திரைப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளியான சிறந்த படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.

மங்காத்தா
பில்லா படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு அஜித்திற்கு சொல்லிக்கொள்ளும் படி பெரிய வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. பின் வெங்கட் பிரபு தனது கேங் மற்றும் அஜித்துடன் இணைந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்த திரைப்படம் இந்த மங்காத்தா.

விநாயக் மஹாதேவ் இந்த பெயரை அஜித் நிச்சயம் மறக்கவே முடியாது, படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை அவர் வரும் காட்சியெல்லாம் யுவன் BGM உடன் கொண்டாட்டமாக அமைந்தது மங்காத்தா திரைப்படம். அஜித் பைக் ஸ்டண்ட், யுவன் பேமஸ் BGM, வெங்கட் பிரபு மறக்கமுடியாத ட்விஸ்ட் என எல்லாம் சிறப்பாக அமைய பிளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது மங்காத்தா.