டி20 போட்டியில் 7000 ரன்களை கடந்தார் – எம்.எஸ்.டோனி புதிய சாதனை

விராட் கோலி, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் டி20 போட்டிகளில் 7 ஆயிரம் ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளனர்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 210 ரன்கள் குவித்தது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி 6 பந்துகளில் 1 சிக்சர் உள்பட 16 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் டோனி அனைத்து விதமான டி20 போட்டிகளிலும் சேர்த்து 7 ஆயிரம் ரன்களைக் கடந்தார். இந்த சாதனையை படைக்கும் 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.