நாட்டில் எரிபொருள் காத்திருப்பால் இரண்டாவது மரணம் பதிவு!

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

கடவத்தையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த 70 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாகொல பிரசேத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மயக்கமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றையதினம் கண்டியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்த 71 வயதான முதியவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.