கிளிநொச்சியில் கைதான இந்திய மீனவர்கள்

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நபர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 13 ஆம் திகதி குறித்த கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.