நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு முழு அரச சேவையும் பாதிக்காதவாறு தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
அரச சேவை தாதியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதன்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.