தமிழகத்தில் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

15, 16-ந்தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.