Google Chrome-ன் புதிய லோகோ

உலகிலேயே கோடிக்கணக்கான பேரால் பயன்படுத்தப்படும் ப்ரவுசஸர் கூகுள் க்ரோம் பிரவுசர். இதை, விண்டோஸ், மேக் ஓ, எஸ், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.

முக்கியமாக ஆண்ட்ராய்டு, விண்டோஸ் ஆகிய இயங்குதளங்களை பயன்படுத்தும் நபர்களால் அதிக மில்லியன் கணக்கில் பயன்படுத்தப்படுகிறது. உலகின் முன்னணி பிரவுசரகளில் இடம்பிடித்துள்ள க்ரோம் 014ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக தனது பிரவுசருக்கு புதிய லுக்கை கொடுத்துள்ளது.

இந்த நிலையில், கூகுள் க்ரோம் ப்ரவுசரானது தற்போது எந்தவித மாற்றமும் இன்றி புதிய லோகோவாக கலரை பிரகாசமாக மற்றுமே மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து கூகுள் க்ரோம் வடிவமைப்பாளராஅன் எல்வின் ஹூ ட்விட்டர் பக்கத்தில், “ உங்களில் சிலர் க்ரோமின் ஒரு புதிய ஐகானை கவனித்திருக்கலாம். 8 ஆண்டுக்கு பின் முதல் முறையாக பிராண்ட் ஐகான்களை புதுப்பிக்கிறோம்.

உங்கள் சாதனங்களில் விரைவில் தோன்றும் என பதிவிட்டுள்ளார். புதிய லோகோவானது Windows, MacOS மற்றும் iOS ஆகியவற்றில் இந்த புதிய லோகோ விரைவில் தோன்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் முன்பிருந்த லோகோவிற்கும், இப்போது இருக்கும் லோகோவிற்கு எந்த மாற்றமும் தெரியவில்லை என சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.