இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி டேப் எஸ்8 விலை விபரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்8 மாடலின் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி டேப் எஸ்8 மாடல் விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதன் வடிவமைப்பு, அம்சங்கள் பற்றிய விவரங்கள் அதிகளவில் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் விலை விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

அதன்படி கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டாப் எண்ட் மாடல் விலை 1699 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1,43,712 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதில் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்படலாம். இத்துடன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., குவால்காம் ஸ்னாப்ராகன் 8 ஜென் 1 பிராசஸர், 11,200 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 14.6 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என தெரிகிறது.

கேலக்ஸி டேப் எஸ்8 பிளஸ் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் விலை 999 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 84,501 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இதில் 12.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 10.090 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 பேஸ் வேரிண்ட் மாடலில் 11 இன்ச் டி.எப்.டி. ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இதன் விலை 970 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 82,048 வரை நிர்ணயம் செய்யப்படலாம்