நாட்டில் சீனி இறக்குமதிக்கான செலவு அதிகரிப்பு!

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிற்கு தேவையான சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்வதற்காக 30.6 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய செலவிடப்பட்ட 14 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடும் போது இது 118.4 வீதம் அதிகரிப்பு.

2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையான காலத்தில் சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய 255.5 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு இவற்றை இறக்குமதி செய்ய 247.4 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டு 3.3 வீதம் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்காக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு அமைய 2021 ஆம் ஆண்டு முதல் 11 மாதங்களில் இலங்கைக்கு உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்வதற்காக ஆயிரத்து 495.3 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது. இது 7.1 வீதமான அதிகரிப்பு.

2020 ஆம் ஆண்டு உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்ய ஆயிரத்து 396.3 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனி மற்றும் தின் பண்டங்களை இறக்குமதி செய்ய 2022 ஆம் ஆண்டில் இதனை விட அதிகளவான டொலர்களை செலவிட நேரிடும் என கூறப்படுகிறது.