விஜய் மடியில் அமர்ந்து உணவு சாப்பிடும் இந்த குழந்தை யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகும் இருக்கும் விஜய், தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுடன் திருமண விழா ஒன்றில் சிறு வயதில் கலந்துகொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில், விஜய்யின் மடியில் அமர்ந்து உணவு சாப்பிடும் குழந்தை யார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

அந்த குழந்தை வேறு யாரும் இல்லை.நடிகரும், விஜய்யின் தம்பியுமான விக்ராந்த் தான்.

விஜய், ஷோபா சந்திரசேகர் மற்றும் விக்ராந்த் மூவரும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படம் தான் அது.