பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் ஜான்வி கபூர் தென்னிந்திய நடிகை ஸ்ரீதேவியின் மகளாவார். இவரது தந்தை போனிகபூர் மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாக்கள் பலவற்றை தயாரித்துள்ளார். இவர் ஒரு இயக்குனரும் ஆவார்.
ஜான்வி கபூர் திரைக்கு வரும் முன்பே கலிபோர்னியாவில் நடிப்புக்கான படிப்பை முடித்து இருந்தார். கடந்த 2018ல் தடாக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் கால்பதித்தார். தனது தந்தையின் தொழிலிலும் அவர் பங்காற்றி வருகிறார்.
நிறைய வெப்சீரிஸ்களுக்கு ஸ்டாரிங் செய்து வரும் ஜான்வி கபூர் சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருவார். மேலும், இவர் பிரபல ஜிம்முக்கு செல்லும் பொழுது ரசிகர்கள் இவரது வீடியோவை அதிகாரமற்ற முறையில் அடிக்கடி வெளியிட்டு வருவார்கள். ஸ்ரீதேவிக்கு எப்படி நிறைய ரசிகர்கள் இருந்தார்களோ? அதே போலவே ஜான்வி கபூருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களுக்கு சில மணித்துளிகளிலேயே பல லட்சம் லைக்குகள் விழுந்துள்ளது.
View this post on Instagram







