குக் வித் கோமாளி புகழின் வருங்கால மனைவியாக இது!

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தவர் புகழ்.

இவர் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 என இரண்டிலும் கோமாளியாக கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் வைத்திருந்தார்.

இவரின் நகைச்சுவையான நடிப்பால் பல முக்கிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன, மேலும் நடிகர் அஜித் நடிக்கும் வலிமை படத்திலும் நடித்து வருகின்றனர்.

மேலும் இவருக்கும் அதிகளவில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து வருவதால் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3-ல் புகழ் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புகழ் அவரின் வருங்கால மனைவியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை கண்ட அவரின் ரசிகர்கள் அவருக்கு எப்போது திருமணம் என கேட்டு வருகின்றனர்.