பிரான்சில் கடையை உடைத்து கொள்ளை

நகைக்கடை ஒன்றின் சுவற்றை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் Le Bouscat (Bordeaux) நகரில் ஜனவரி 17 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Médoc எனும் நகைக்கடைக்கு அதிகாலையில் வந்த கொள்ளையர்கள் சிலர், கடையின் பின்பக்க சுவற்றை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்த நகைகளை திருடிச்சென்றனர். திருடப்பட்ட நகைகள் மொத்தமாக சுமார் €800,000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.