கனேடிய மாகாணம் ஒன்றில் சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

கனேடிய மாகாணமொன்றில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் ஒன்ராறியோ மாகாணத்தின் மருத்துவமனைகளுக்கு வெளிநாடுகளில் செவிலியர் பயிற்சி பெற்ற செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் தேவைப்படுகிறார்கள்.

இந்த செவிலியர்களில் சுமார் 300 பேர் மாகாணத்தில் அதிக தேவையிலுள்ள 50 மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். மேற்பார்வையின் கீழ் நோயாளிகளை அவர்கள் கவனித்துக்கொள்ளும் அதே நெரத்தில், ஒன்ராறியோவில் அவர்கள் பணி உரிமம் பெறுவதற்கான நடவடிக்கையும் துவக்கப்படும்.

மார்ச் மாத இறுதிக்குள், ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற 6,000 சுகாதாரத் துறை பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த பணியாளர்களில், செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகள், மருத்துவப் பயிற்சி பெறும் மாணவர்கள் மற்றும் பிற மருத்துவத்துறை மாணவர்களும் அடங்குவர்.

கனடாவின் பிற பகுதிகளைப் போலவே, ஒன்ராறியோவிலும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.

குறிப்பாக, ஒன்ராறியோவில் ஏழு நாட்களில் சராசரியாக எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள் என்னும் எண்ணிக்கை கிட்டத்தட்ட 11,000 ஆக உள்ள நிலையில், Omicron பரவல் வேறு அதிகம் உள்ள நிலையில், மருத்துவமனைகளில் காணப்படும் செவிலியர் முதலான பணியாளர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க அரசு பெரும் தொகையை ஒதுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.