தமிழில் நிறைய சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் டிவியின் பகல் நிலவு சீரியல் இவருக்கு மிக முக்கியமான சீரியலாகும்.
இந்த சீரியலில் நடித்த ஹீரோவுடன் ஷிவானிக்கு காதல் என்று பல்வேறு கிசுகிசுக்கள் கிளம்பியது. பகல் நிலவு சீரியலிலும் இவர்களது ரொமான்ஸ் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கும். இதை கண்ட பலரும் இவர்கள் நடிக்கவில்லை. நிஜமாகவே ரொமான்ஸ் செய்கிறார்கள் என்று கிசுகிசுத்தனர்.
இத்தகைய நிலையில் தான் அவருக்கு பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை ஷிவானி சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை ஷிவானி நாராயணன் வெளியிட்டு வருவார்.
View this post on Instagram
அந்த வகையில் தற்போது அவர் ஆர்ஜே பாலாஜியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அடுத்த பட அப்டேட் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







