மசாலா இட்லி… செய்வது எப்படி?

காலையில் செய்த இட்லி மீதம் இருந்தால் அதனை உப்புமாவாக செய்யாமல் வித்யாசமாக மசாலா இட்லி போல செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர். அதனை எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையானவை:

ஒரு கப் நறுக்கிய தக்காளி – 2

பச்சை மிளகாய் – 3

பெரிய வெங்காயம் – 2

தேவைக்கேற்ப கறிவேப்பிலை, கடுகு

கடலைபருப்பு

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

இட்லி – 5

கொத்தமல்லி – தேவையான அளவு

உப்பு – சுவைக்கு

மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்

செய்முறை:

இட்லியை சதுரமாக நறுக்கி கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்கடுகு, கடலை பருப்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் அரை மேசைக்கரண்டி மஞ்சள் தூளையும் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்கிம மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கி அதில் இடலியை சேர்த்து மசாலா சேரும் வரை உடையாமல் கிளறி இறக்கினால் மசாலா இட்லி தயார்.