விரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ரெட்மி பிராண்டு தனது புதிய நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உணர்த்தும் வகையில் ரெட்மி டீசர் வெளியிட்டுள்ளது.

டீசரின்படி புதிய ஸ்மார்ட்போன் நான்கு கேமரா சென்சார்களை கொண்டிருக்கிறது. இதில் ஒரு 108 எம்.பி. கேமராவும் இடம்பெற்று இருக்கிறது. டீசரில் புதிய ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் ஃபிரேம் கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் அமோலெட் ஸ்கிரீன் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முந்தைய தகவல்களின்படி இந்த ஸ்மார்ட்போனில் சாம்சங் ஹெச்.எம்.2 சென்சார், 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. ஆம்னிவிஷன் மேக்ரோ கேமரா, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது.

சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் எப்.சி.சி. வலைதளத்தில் லீக் ஆனது. அதில் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 6 ஜி.பி. + 64 ஜி.பி., 6 ஜி.பி. + 128 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.