தமிழகத்தில் காதலனை திருமணம் செய்து கொண்ட மகளுக்கு பெற்ற தாயே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
நெல்லையின் திசையன்விளையை சேர்ந்தவர் அமராவதி, இவரது மகள் அபி இறந்துவிட்டதாக ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த அபியின் கணவர் விசாரித்ததில், அமராவதி தான் போஸ்டர் அடிக்கச்சொன்னது தெரியவந்தது.
இதனையடுத்து அபியின் கணவர், திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை போலீசார் விசாரித்த போது, தங்களது விருப்பம் இல்லாமல் காதலனை திருமணம் செய்து கொண்டதால் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளனர்.
அபிராமிக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகளான அபி பக்கத்து வீட்டில் இருந்த சந்தோஷை காதலித்து வந்துள்ளார்.
இவர்களது காதலுக்கு அபி வீட்டில் எதிர்ப்பு எழவே, சந்தோஷை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் கோபத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிக்கச்சொன்ன அமராவதி, ஊர் முழுக்க போஸ்டர் ஒட்டியுள்ளார்.