சுவிஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனோ

சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 6 ஆயிரத்து 852 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து சுவிஸில் 15 இலட்சத்து 40 ஆயிரத்தை 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 462 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.

சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 4 இலட்சத்து 17 ஆயிரத்து 745 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 286 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 199 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 11 இலட்சத்து 09 ஆயிரத்து 809 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.