நம்முடைய உடலில் மிக முக்கியமான பகுதியாக நுரையீரல் செயல்பட்டு வருகின்றது. இந்த நுரையீரல் முக்கியமாக காற்று மாசு, புகைப்பிடித்தல் காரணமாக புற்றுநோய் உருவாகவும் வாய்ப்புண்டு.
அதுமட்டுமில்லாமல் நம்முடைய உடலில் ஆஸ்துமா, சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவை ஏற்படுத்த முக்கிய பங்காக விளங்குகிறது. எனவே நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து தெளிவாக பார்க்கலாம்..
தினமும் உணவு வகைகளில் வெங்காயத்தை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அதுபோல ஆன்டிஆக்ஸிடென்டு அதிகம் நிறைந்த சிறு வெங்காயம் உட்கொள்வது சிறந்தது.
கீரைகள், பச்சை காய்கறிகள், பூண்டு போன்றவற்றில் நார்சத்து அதிகமாக இருப்பதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது. கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகளை நம்முடைய உணவில் சேர்த்து கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
குறிப்பாக கோதுமையை நாம் வாரத்திற்கு நான்கு நாட்களாவது எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அதில் வைட்டமின் அதிகம் நிறைந்து இருக்கிறது. இதனை நாம் உட்கொண்டால் நீரிழிவு நோயிலிருந்தும் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.