இலங்கையில் விசா இன்றி இருந்த இரு வெளிநாட்டவர்களை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இருவரையும் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு வெளிநாட்டவர்களையும் பொலிஸார் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த நிலையில் இருவரையும் 10 -01-2022 திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, 21 மற்றும் 23 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது சம்பவம் குறித்து களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்







