நடிகர் ஆர்யா, ஜெய் நடிப்பில் வெளியான ராஜா ராணி என்ற தனது முதல் படத்திலேயே தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் தான் இயக்குனர் அட்லி.
அதன் பின்னர், தமிழ் முன்னணி நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.
அவரது, திரைப்படங்கள் வெளியாகும் ஒவ்வொரு தடவையும் மற்ற படங்களில் காப்பி என்றே நெட்டிசன்கள் பரப்பி விடுவது வழக்கம்.
இந்நிலையில், தற்போது இயக்குனர் அட்லி அவரது மனைவியுடன் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அவரது மனைவியுடன் விளையாடும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் இருவரும் பனிக்கட்டிகள் சூழ்ந்த இடத்தில் அட்லிக்கு, அவரது மனைவி முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.







