புத்தாண்டின் முதல் நாளிலேயே சதமடித்த பிரபல வீரர்! பறந்த பவுண்டரிகள், சிக்சர்கள்…

புத்தாண்டின் முதல் நாளில் சதம் அடித்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து அணி நட்சத்திர வீரர்டேவன் கான்வே.

வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

2022ஆம் ஆண்டு பிறந்து முதல் போட்டியாக இந்த நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் போட்டி ஒன்றாம் திகதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் முதலில் டாம் லேதம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

முதல் இன்னிங்சில் துவக்கம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் நான்காவது ஓவரின் 3-வது பந்தில் கேப்டன் டாம் லேதம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் 52 ரன்கள் எடுத்த நிலையில் மற்றொரு துவக்க வீரரான வில் யங் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் மூன்றாவது வீரராக களமிறங்கிய டேவன் கான்வே மற்றும் ராஸ் டைலர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

டேவன் கான்வே 227 பந்துகளை சந்தித்து 122 ரன்களை குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 258 அடித்திருந்தது.