கனடாவில் புலம்பெயருக்கான சலுகைகள் நீடிப்பு!

கனேடிய புலம்பெயர்தல் துறை, நிரந்தர வாழிடம் கோரி விண்ணப்பிக்கும் சில வெளிநாட்டவர்களுக்கு, தற்காலிக மருத்துவப் பரிசோதனை செய்வதிலிருந்து விலக்கு அளிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறது.

கனடாவுக்குள்ளிருந்து புலம்பெயர்தலுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை ஒன்றை செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை, இம்மாதம் (டிசம்பர்), 28ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, அந்த சலுகையை 2022 மார்ச் 31 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டவர்கள் நிரந்தர வாழிடம் கோரி விண்ணப்பிக்கும்போது, அவர்கள் புலம்பெயர்தல் மருத்துவப் பரிசோதனை ஒன்றிற்கு உட்படடவேண்டும் அல்லது முந்தைய பரிசோதனையின்போது கொடுக்கப்பட்ட எண்ணை சமர்ப்பிக்கவேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்கின்படி, அவர்கள் ஏற்கனவே ஒரு மருத்துவப் பரிசோதனை செய்திருந்தால், மற்றொரு மருத்துவப்பரிசோதனைக்கு உட்படவேண்டியதில்லை. அதுவும், அவர்கள் கீழ்க்கண்ட நிலையில் இருந்தால்…

அவர்கள் நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பித்தவர்கள், ஆனால், புதிய புலம்பெயர்தல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படவில்லையென்றால்…

அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள். அவர்களால் பொது சுகாதாரத்துக்கோ பாதுகாப்புக்கோ எந்த அபாயமும் இல்லை என தெரியவந்தால்…

கடந்த ஆண்டில், அவர்கள் பெடரல் அரசின் புலம்பெயர்தல் மருத்துவப் பரிசோதனை தேவைப்படும் நாடுகள் பட்டியலில் உள்ள வேறெந்த வெளிநாட்டிலும் ஆறு மாதங்களுக்கு மேல் தங்குவதற்காக கனடாவிலிருந்து வெளியேறாதவர்களாக இருந்தால்…

விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்கள் மேற்கூறப்பட்டுள்ள நெறிகுறைகளுக்குட்படுவதுடன், கனடாவில் வாழ்பவர்களாகவும் இருந்தால், இந்த சலுகைக்கு தகுதியுடையவர்களாகலாம்.

இந்த சலுகை, புலம்பெயர்தல் விண்ணப்பங்களை பரிசீலித்தல் விரைவாவதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.