40 வயதை கடக்கும் ஆண்களுக்கு

நீண்ட காலம் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே பலரது விருப்பம். ஆனால் பலருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்குமே தவிர அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க தெரியாது.

பெரும்பாலும் ஆண்கள் 40 வயதை எட்டி விட்டாலே நமக்கு மிகவும் வயதாகி விட்டது என்பது போல உணர துவங்கி விடுகிறார்கள்.

ஆனால் உண்மையில் 40-50 வயதில் தான் உடல் சுறுசுறுப்பாக வேலை செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆண்களுக்கு வயது ஏறும் போது குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படுவார்கள். இந்த நோயில் இருந்து எப்படி தப்பிப்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

40 வயதை கடந்த ஆண்களுக்கு வர கூடிய அபாய புற்றுநோயாக இருக்கிறது புரோஸ்டேட் புற்றுநோய். இதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று அடிக்கடி சிறுநீர் கழிப்பது. புரோஸ்டேட் சிறுநீர்க்குழாயில் அழுத்தம் கொடுப்பதன் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை ஏற்படலாம்.

உயர் ரத்த அழுத்த அறிகுறிகளை உரிய நேரத்தில் கண்டறியாவிட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே 40 வயதை கிடந்த ஒருவர் அவ்வப்போது ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

வயதானதன் ஒரு பகுதி தசைகளின் நிறை குறைவது. sarcopenia எனப்படும். வயது தொடர்பான தசை இழப்பு, முதுமையின் இயல்பான பகுதியாகும். 30 வயதிற்கு பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குள்ளும் 3-5 சதவீத தசை நிறையை இழப்பது இயல்பானது.

கவலைகள் மற்றும் சோகங்களை மனதிற்குள்ளேயே அடக்கி வைத்தால் மனமும் மிக கடுமையாக பாதிக்கப்படும். மனசோர்வு, தூக்கமின்மை, சோக உணர்வு, கவலைகள் உள்ளிட்டவை இருந்தால் அதை நீடிக்க விட கூடாது மற்றும் கன்ட்ரோல் செய்ய முயற்சிக்க கூடாது.