4 மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.
யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். மேலும் சில நாட்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில், இரு பக்கமும் ஆட்களின் உதவியுடன் யாஷிகா நடக்க மேற்கொள்ளும் வீடியோ.
மேலும் ரங்கா இயக்கத்தில் இவர் நடித்த BESTIE படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்தநிலையில் இவருடைய தங்கை ஓஷின் ஆனந்த்தும் மீடியா வெளிச்சத்திற்கு வந்துள்ளார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் இவரது அக்காவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் உள்ளன.










