மதுபோதையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தை…!

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூரில் 37 வயது நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 வயது மகள் இருக்கிறார். அந்த நபர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவதன்று அவரது மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். போதையின் உச்சத்தில் அவர் தனது 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தூள்ளார். தனது தாய் வந்ததும் அவரிடம் நடந்தவற்றை அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபோதையில் பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.