ஐரோப்பிய நாடுகள் போன்ற தோற்றத்திற்கு மாறிய இலங்கையின் ஒரு பகுதி

நுவரெலியா நகர சபை எல்லையின் பல இடங்களில் நேற்றும் இன்றும் பனித்துளிகள் விழுந்துள்ளன.

ஒவ்வொரு வருடமும் நத்தார் காலப்பகுதியில் நுவரெலியாவில் பனித்துளிகள் விழுவது வழக்கமாக இடம்பெறும் ஒரு நிகழ்வாகும்.

நுவரெலியா ப்லெக்பூல் பிரதேசத்தில் மரக்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய இடங்களிலும், தேயிலை தோட்டங்களிலும் பனித்துளிகளை அவதானிக்க முடிந்துள்ளது.

பனித்துளி விழுவதனை தொடர்ந்து நுவரெலியா பிரதேசம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகின்றது.

இந்த காலநிலையால் மரக்கறிகள் மற்றும் தேயிலை பயிர்செய்கைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக நுவரெலியா பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

லிட்டில் லண்டன் என பெயர் கொண்டு அழைக்கப்படும் நுவரெலியா, ஐரோப்பிய நாடுகளை போன்று காட்சியளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.