மலையகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு!

மலையக தோட்டத்தில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மலையக பெருந்தோட்ட நகரங்கள் மற்றும் தோட்ட பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு நாளும் பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்வதாகவும், எரிபொருள் வாங்க முடியாமல் வெறுங்கையுடன் அலைவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

காஸ் சிலிண்டர்கள் இல்லாததாலும், முறையான சமையல் எரிவாயு அமைப்பு இல்லாததாலும் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.