கராம்பு டீ உடலுக்கு ஏற்ப்படுத்தும் ஆரோக்கியம்

​பொதுவாக சமையலறைகளில் பயன்படுத்தப்படும் மசாலா வகைகளில் ஒன்று தான் கிராம்பு . இது வெவ்வேறு உணவு வகைகளில் சேர்க்கும் போது அந்த உணவுக்கு தனி சுவை மற்றும் மணம் அளிக்கிறது.

கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள் , மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

கிராம்பு சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிப்பிலும் கிராம்பு முக்கிய பொருளாக சேர்க்கபடுகிறது. மேலும் வாசனைத் திரவியங்கள், சோப்புத் தயாரிப்பிலும் கிராம்பு பயன்படுகிறது.

அதுமட்டுமின்றி இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்ததுள்ளது. இதனை தேநீர் வடிவில் எடுத்து கொண்டால் இன்னும் நன்மையே. தற்போது கிராம்பி டீ எப்படி செய்வது? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
கிராம்பு டீ தயாரிக்கும் முறை :

முழு கிராம்பு -1-4
தண்ணீர் -1 கப்
​கிராம்பு டீ தயாரிக்கும் முறை :

ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் சில கிராம்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு 3-5 நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து குடியுங்கள்.

ஒரு கப் தேநீர் போதுமானது. அதற்கு மேல் குடிப்பது சில பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.
பயன்கள்

கிராம்பு டீ குடிப்பதால் செரிமானம் மேம்படும். இதன் மூலம் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

சைனஸ் பிரச்சினைகள் இருப்பவர்கள் கிராம்பு தேநீர் குடிப்பது நல்லது. அதிலுள்ள யூஜெனால் சளியை அகற்ற உதவுகிறது.

கிராம்பு டீ உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்ற உதவுகிறது. பல்வேறு சரும பிரச்சனைகளை களைகிறது.

கிராம்பு தேநீர் குடிப்பது காயங்கள், தோல் பிரச்சினைகள் மற்றும் பூஞ்சை தொற்றுக்களை குணப்படுத்து.

கிராம்பு தேநீரை குடிப்பது உங்க புற்று நோயை நீங்கள் எதிர்த்து போராட உதவி செய்யும்.

கிராம்பு டீ குடிப்பது நாள்பட்ட மூட்டுவலியில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கிராம்பு உதவி செய்யும்.

கிராம்பு தேநீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கிராம்பு டீ குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.