அதிகம் பசிக்கும் வேளையில் உண்ணத்தகாத உணவுகள்

காலை நேரத்தில் பரபரப்பாக வெளியில் கிளம்பி செல்லும் பலரும் சாப்பிட கூட நேரம் இல்லை என சொல்லிவிட்டு ஏனோ தானோ என சாப்பிட்டுவிட்டு செல்வார்கள்.

இதனால் அவர்களுக்கு மதிய நேரத்தில் தான் அதிகமாக பசி எடுக்கும்.

மதிய நேரத்தில் சாப்பிட கூடிய உணவை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். இல்லையேல் உடலுக்கு பல தொந்தரவுகள் வரும்.

சூப்

மதிய நேரத்தில் சூப் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த வகை உணவுகள் சாப்பிட்ட உடனேயே பசி அதிகரிக்கும். இதனால் வழக்கமாக சாப்பிடும் உணவை காட்டிலும் அதிகமான உணவை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் உண்டாகும். கடைசியில் அது உடல் பருமனில் கொண்டு போய்விட்டு விடும்.

நூடுல்ஸ்

சுவையாக உள்ளதே என்பதற்காக பாஸ்தா, நூடுல்ஸ் முதலியவற்றை மதிய நேரத்தில் சாப்பிடாதீர்கள். இது உங்களின் உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து விடும்.

பர்கர்

பர்கர், பீட்சா போன்ற உணவுகள் மதிய நேரத்தில் சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்கள் அதிகளவில் சேரும், இது மலச்சிக்கல், இதய நோய் பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

சாலட்ஸ்

சாலட்டில் மிக குறைவான அளவில் கலோரிகள் உள்ளன. ஆனால், இது காலை நேரத்தில் எடுத்து கொண்டால்தான் நல்லது. அதனால், இந்த வகை உணவை மதிய நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

ஜுஸ்

வெறும் ஜுஸை மதிய வேளையில் சாப்பிடக்கூடாது. ஜூஸானது மிக விரைவாக பசியை உண்டாக்கி வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டி விடும்.