கொகட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் மான் இறைச்சியுடன் ஒருவர் கைது!

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி மும்மாரி பிரேதேசத்தில் வைத்து மான் இறைச்சியுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் நடமாடியதாக கிடைக்கப்பெற்ற தகவலின் படி அவரை பொலிஸார் விசாரித்தபோது அவரிடம் மான் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்த நபரை இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.