குழவி கொட்டுக்கு இலாக்கான மாணவர்கள்

ஹட்டன் – ஹெல்பொட தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (15) காலை பாடசாலை மாணவர்கள் மீது குளவி கொட்டியதில் 17 மாணவர்கள் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக்கு அருகில் உள்ள பெரிய மரமொன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூட்டை பருந்து தாக்கியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மாணவர்கள் மீது குளவி கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.