IPL2022; புதிதாக களமிறங்கும் அணிகளுக்கு ஏற்ப்பட்டுள்ள சிக்கல்!

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டியை விளையாட உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம், இருக்க அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் (IPL) பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

ஐபிஎல் 15-வது சீசன் ஏப்ரல் 2-ம் தேதியில் தொடங்க இருக்கிறது. புதிதாக இரண்டுகளான லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் இணைந்துள்ளதால், போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லக்னோ (LUCKNOW) மற்றும் அகமதாபாத் (AHMEDABAD) அணிகளுக்கு பிரச்சினை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால், அகமதாபாத் அணியை ஏலத்தில் எடுத்த சிவிசி (CVC) குழுமம் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட சில சட்ட விரோதமான நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் காரணமாக பிசிசிஐ (BCCI) அந்த அணியை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என எச்சரித்து இருக்கிறது. மேலும், லக்னோ அணியையும் எந்த ஒரு வீரரையும் தேர்வு செய்யக்கூடாது எனவும், பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என கூறி இருக்கிறது.

ஆனால், ஒரு வேளை அகமதாபாத் அணி மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், அந்த அணியை அடுத்த ஆண்டு விளையாட முடியாத நிலை ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.