ரோஜா சீரியல் சாமிலிக்கு குழந்தை பிறந்தது

ரோஜா சீரியலில் முன்பு வில்லியக நடித்த ஷாமிலி சுகுமார் கர்ப்பமாக இருந்த நிலையில், இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே டாப் ரேட்டிங்கில் உள்ளது ரோஜா தான். இந்த சீரியலில் நாயகனாக சிபு சூரியன் என்பவரும் நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ள இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஹிட்டாக முக்கியமான காரணம் இந்த தொடரின் வில்லி ஷாமிலி சுகுமார்தான்.

வில்லியாக நடித்து பயங்கர வில்லத்தனம் செய்து வருகிறார். நெகட்டிவ் கேரக்டருக்கு கட்சிதமாக பொருந்திய இவருக்கு சிறந்த வில்லி விருதும் கிடைத்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருந்த காரணத்தினால் சீரியலிலிருந்து விலகிய நிலையில், இன்று அழகான பெண் குழந்தையினை பெற்றெடுத்துள்ளார்.

தனது குழந்தையின் கைவிரல்களை புகைப்படமாக வெளியிட்ட ஷாமிலி, காத்திருப்பு முடிவடைந்தது… இளவரசியை வரவேற்பதாக கூறியுள்ளார்.