விராட் கோலியின் பதவி இதனால் தான் பறி போனதாம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அதிரடியாக விராட்கோலியை ஒரு நாள் போட்டியில் கேப்டன் பதிவியில் இருந்து தூக்கியது. இதனால், வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்த அறிவிப்பால் விராட் கோலி மிகவும் மன உடைந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. விராட் கோலியை கேப்டன் பதிவியில் இருந்து தூக்குவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலுமே, அதற்காக பிசிசிஐ அவசரமாக தூக்கியது தான் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

இந்த நிலையில், கோலியின் கேப்டன் பதவிக்கு பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தான் காரணம் என திட்டி தீர்க்கின்றனர். மேலும், கங்குலி ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தற்கான காரணத்தை தெரிவித்து இருந்தார்.

அதில், விராட் கோலி டி-20 போட்டியில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிப்பதற்கு முன்பே பிசிசிஐ அவரிடம், கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்டோம்.

ஆனால், கோலியே அதற்கு சம்மதிக்கவில்லை. டி-20 போட்டிகளுக்கு ஒரு கேப்டன் ஒரு நாள் போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்ற முடிவை பிசிசிஐ விரும்பவில்லை.

இதன் காரணமாக தான் கோலியை டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாகவும், ரோகித் சர்மாவை ஒரு நாள் மற்றும் டி20 போட்டிக்கு கேப்டனாகவும் பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது.

மேலும், ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலி இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை. தற்போது இந்திய அணி ஒரு வலுவான அணியாக உள்ளது என்று நம்புகிறோம் என தெரிவித்து இருக்கிறார்.