விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இதில் கண்ணம்மாவாக ரோஷ்நி ஹரிப்ரியன் நடிக்கிறார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.
அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் அவருக்கு விஜய் டிவியின் மூலமாகத்தான் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ரோஷினி தனக்கு கதாநாயகி ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், எனவே அவர் கண்ணம்மா சீரியல் விட்டு விலகி விட்டதாகவும் கூறப்பட்டது.
இத்தகைய நிலையில் இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தை ரிப்லேஸ் செய்ய பிரபல மாடல் அழகி வினுஷா தேவி வந்துள்ளார். சீரியலில் இருந்து விலகிய நிலையில், முதல் முறையாக ரோஷினி ஹரிப்ரியன் தற்போது ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram







