ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் ரயிலில் உயிரிழப்பு!

ரயில் ஒன்றில் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவமானது காலை 11.55 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் குறித்த விபத்தில் தாய்,தந்தை மற்றும் மகன் ஆகிய மூவரும் பலியாகியுள்ளனர்.

இதனையடுத்து சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்ண்டு செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.