தீர்வுகாண இயலாத நிலையில் இலங்கை

அரசியல்வாதி ஒருவர், மக்களின் அரசியல் நாடித் துடிப்பு பற்றி சரியாக அறிந்துகொள்ளாவிட்டால், அவர் அரசியல்வாதி அல்ல எனவும் அப்படியான ஒருவருக்கு நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ. குணசேகர (Dew Gunasekera) தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடிக்கு தீர்வில்லை என்பதால், நாடு அதளபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகளை சந்திக்காது, அடிக்கடி கலந்துரையாடாத எந்த தலைவருக்கும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அப்படியான சந்தர்ப்பத்தில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி போன்ற நெருக்கடிகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

தலைவர்கள் முதலில் நெருக்கடிகளுக்கான பிரச்சினைகளை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். கடந்த தேர்தல்களில் அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களில் பெரும்பாலானவர்கள் தற்போது அரசாங்கத்தை விட்டு தூர விலகிச் சென்றுள்ளனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சிக்கு வந்த சகல அரசாங்கங்களும் இப்படியான நிலைமையை எதிர்நோக்கி ஆட்சி அதிகாரத்தை கைவிட்டுச் செல்ல நேர்ந்தது என்பதற்கு வரலாறு சாட்சியம் கூறும் எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.