கண் முடிகளின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி?

பலருக்கும் கண் இமைகளின் முடி குறைவாகவே இருக்கும் அதற்கு காரணம் ஆரோக்கிய குறைபாடு தான். விட்டமின் சி விட்டமின் இ, மற்றும் விட்டமின் பி போன்ற உணவுகளை சாப்பிடுவது நல்லது.

மேலும், இரவு தூங்கும் முன்பு கண் இமை முடியின் மீது நல்ல கற்றாழை ஜெல்லை தடவவும். கற்றாழையில் உள்ள தாது உப்புக்கள் மற்றம் விட்டமின் போன்றவை இமை முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மேலும், கண் இமை முடி வலிமையாக இருக்க உதவுகிறது. தினமும் தூங்கச் செல்லும் முன்பு ஆலிவ் எண்ணெய் அல்லது விளக்கெ-ண்ணெய் இதில் ஏதேனும் ஒன்றை எடுத்து கண் இமை முடிகளில் தடவவும்.

எலுமிச்சை தோலை விளக்கெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யில் ஒரு வாரம் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை தடவி வந்தால் முடி வளரும். இவ்வாறு செய்தால் கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

கண்களை மூடிக் கொண்டு கண் இமைகளின் மேல் மென்மையாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதன் மூலம் கண்களில் இரத்த ஓட்டம் சீராகி இமை முடி நன்கு வளரும்.

மேலும், கண்களில் இயற்கையான கண் மை பயன்படுத்துவது நல்லது. கண் இமை முடிகளை செயற்கையாக வளைக்கக் கூடாது. இரவு தூங்க செல்லும் முன்பு கண்களுக்கு வைக்கும் மையை கட்டாயம் நீக்கி தேங்காய் எண்ணெய் தடவி வரலாம்.