சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இருவர் கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்ந்து கனரக வாகனத்தில் ஏற்றிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய இன்று அதிகாலை பொலிஸார் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது கனரக வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.