அரிசி ரொட்டி செய்வது எப்படி?

பணிக்கு செல்பவர்கள் காலை வேளைகளில் விரைவாக உணவு செய்ய விரும்புவர் அவர்களுக்கு சூப்பரான அரிசி ரொட்டி எப்படி செய்வது என பார்போம்.

தேவையானவை:

அரிசி மாவு – 1 கப்

தேங்காய் துருவல் – 1 கப்
உப்பு – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 5 ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்

செய்முறை:

அரிசி மாவுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர், தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை போட்டு அது காய்ந்ததும் எண்ணெய் விட்டு ரொட்டியை தட்டி போட்டு வேகவைத்து எடுக்கவேண்டும்.